/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவிலில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
/
கோவிலில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
ADDED : மார் 20, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில், கோடையை தணிக்க, நீர்மோர் பந்தல் திறக்கப்படுகிறது. அதன்படி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், நேற்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் சரவணபவன், நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார். கோடை காலம் முடியும் வரை, தினமும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக, செயல் அலுவலர் தெரிவித்தார்.

