sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

 திருப்பூரில் ஒரு 'பொள்ளாச்சி'யா?

/

 திருப்பூரில் ஒரு 'பொள்ளாச்சி'யா?

 திருப்பூரில் ஒரு 'பொள்ளாச்சி'யா?

 திருப்பூரில் ஒரு 'பொள்ளாச்சி'யா?


ADDED : டிச 09, 2025 08:00 AM

Google News

ADDED : டிச 09, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சி த்ராக்கா... கார்த்திகை மாசமே பனி கொட்டுது...''

நடுங்கியவாறே வந்தாள் மித்ரா.

''மித்து... சுடச்சுட டீ குடிச்சா சுறுசுறுப்பாயிடும். மாவட்டத்துல எஸ்.ஐ.ஆர். பணி விறுவிறுன்னு நடக்குதாம்ல''

''ஆமாக்கா... கெடு முடியப்போகுது... எவ்ளோ பார்ம் திரும்பி வந்திருக்கோ... எவ்ளோ பேரை நீக்கப்போறாங்களோன்னு கட்சிக்காரங்க கிட்ட மட்டுமில்லாம, வாக்காளர்கள் கிட்டயும் 'திக்... திக்'ன்னு தான் இருக்கு...''

''மித்து... இதுல பம்பரமா சுத்தறது தி.மு.க.காரங்கதான். மத்தக் கட்சிக்காரங்க இவங்ககிட்டக் கூட நெருங்க முடியல... எஸ்.ஐ.ஆர். பணி துல்லியமா முடியும்ன்னு தி.மு.க. காரங்க அடிச்சு சொல்றாங்க''

''அக்கா... 2002 விவரத்தை பார்ம்ல பதிவு செய்யாத வாக்காளருக்கு, வரைவுப்பட்டியல் வெளியான பிறகு, நோட்டீஸ் அனுப்புவாங்க... அப்ப, தற்போது இருக்கிற ஆவண நகலைக் கொடுக்கணும்ன்னு கலெக்டர் சொல்லியிருக்காரு.

''அனைத்துக் கட்சி கூட்டத்துல கலந்துக்கிட்ட 'தோழர்'கள், வாக்காளர் எளிதா பதிவு செய்ய ஆதார் ஆதாரத்தை ஏற்கணும். அதுக்குப் பிறகு சந்தேகம் வந்தா மட்டும், வேறொரு ஆவண நகலைக் கேட்கலாம்ன்னு யோசனை சொல்லியிருக்காங்க''

''மித்து.. ஆரம்பத்துல ஆதார் இணைக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு இருந்த 'தோழர்'கள் இப்ப ஆதார் வேணும்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்கன்னு மத்தக் கட்சிக்காரங்க கிண்டலா சொல்றாங்களாம்.

''இறந்த வாக்காளர், இடம்பெயர்ந்தவர் பெயரை ஓட்டுச்சாவடி கட்சி முகவருங்க எழுதிக்கொடுத்தா நீக்கிடுவாங்களாம். வேறசமயத்துல நீக்கணும்ன்னா இறப்புச்சான்றிதழ் வேணும்ன்னு கேப்பாங்க...

''ஆனா ஒன்னு... ஒவ்வொரு பார்ம்லயும், வெவ்வேற கட்சிகளைச் சேர்ந்த முகவர்களோட கையெழுத்து வேணும்ன்னு கலெக்டர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம்.

''தேர்தல் கூட்டணி இன்னும் முடிவாகல... ஆனா, இதுக்குக் கூட்டணி சேர்ந்துதான் ஆகணும்ன்னு, கட்சிக்காரங்க சொல்றாங்களாம்''

சித்ரா சிரித்தவாறே பகிர்ந்தாள்.

சூரியப் பிரகாசம் ''மித்து... மத்திய பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருக்கிற கால்நடை மருத்துவமனை வளாகத்துல 'முதல்வர் படைப்பகம்' கட்டக்கூடாதுன்னு பா.ஜ. காரங்க தெளிவா சொல்றாங்களே...''

''ஆமாங்க்கா... இப்ப எல்லாம், பிரச்னைகள் குறித்து பேசுறதுக்கு முன்னாடி அதுகுறித்து தெளிவா, ஆழமா பா.ஜ. காரங்க தெரிஞ்சுக் கிறாங்களாம்.

''எதிர்க்கட்சிக்காரங்களோட ஆளும்கட்சிக் காரங்க சண்டை போடுறது இப்ப அவுட் ஆப் பேஷன் ஆயிடுச்சு... அந்தந்தக் கட்சிகளுக்குள்ளேயே சண்டை போடுறதுதான் இப்ப பேஷன்.

''சிட்டி 'பாதர்' தன்னோட வீட்ல மின் இணைப்பு முறைகேடு அம்பலமானவுடனே, கட்சியோட மாவட்ட செயலாளர்ங்கறதால கட்சி ஆபீஸ்ல மின் இணைப்பு விவகாரத்தில் உஷாராயிட்டாராம். கட்டட உரிமையாளர்ட்ட வணிக மின் இணைப்பா வகை மாற்றம் செய்ய விண்ணப்பிக்க சொல்லியிருக்காராம்.

''இப்பிரச்னைல ஆர்வம் காட்டுற சமூக ஆர்வலருக்கு, ஒரு மொட்டைக்கடுதாசி வீட்டுக்கு வந்துச்சாம். அதுல, 'எங்க தலைவர் விவகாரம்தான் தெரியுமா... எதிர்த் தரப்பு தலைவரோட கட்சி ஆபீஸ் கட்டடத்திலும் மின் இணைப்பு முறைகேடு இருக்கு. தெரியாதா'ன்னு அதுல இருந்துச்சாம்.

''இதுக்குப் பேருதான் போட்டுக்கொடுக்கறதுங்கறது... தெற்கு வி.ஐ.பி.யைக் குறிப்பிட்டு எதிர்த்தரப்புன்னு சொல்லியிருக்கிறாங்க. ''அப்புறம் விவரங்களைத் தோண்டிப்பார்த்தா, அங்கேயும் மின் இணைப்பு முறைகேடாத்தான் இருக்குதாம். இப்ப ரெண்டுதரப்பும் திருதிருன்னு முழிக்கிறாங்களாம்.

''இதுதான் சூரியனோட பிரகாசம்ன்னு எதிர்க்கட்சிக்காரங்க கிண்டலடிக்கிறாங்களாம்''

மித்ரா பகிரங்கப்படுத்தினாள்.

பாலியல் அத்துமீறல் ''மித்து... 'தாரா' பகுதில, 'இலை' கட்சியோட ஐ.டி. விங்கைச் சேர்ந்த மூனு பேர், சில பெண்கள், சிறுமிகளோட பாலியல் ரீதியா வீடியோ, போட்டோல்லாம் எடுத்து அத்துமீறியிருக்கறாங்களாம். கட்சிக்காரங்க கொதிச்சுப் போயிருக்காங்களாம்.

''இதுதொடர்பா 'மகேந்திர' நிர்வாகிகிட்ட சொல்லிட்டாங்களாம்.

''கேரளா உள்ளாட்சித்தேர்தல் பிரசாரத்தை முடிச்சுட்டு வந்தவுடனே அவங்க மேல நடவடிக்கை உறுதியா எடுக்கறேன். அதுக்குப் பிறகு போலீஸ்ல புகார் கொடுக்கலாம்ன்னு சொல்லியிருக்காராம்.

''இது பொள்ளாச்சி சம்பவம் போல பெரிசா வெடிக்கும்ன்னு கட்சி வட்டாரத்துல பேசிக்கிறாங்க''

சித்ரா ஆதங்கப்பட்டாள்.

'சில்மிஷ' போலீஸ் ''சித்ராக்கா... சிட்டி ஆயுதப்படைல இருக்கற ஒரு போலீஸ்காரர் 'பெரியண்ணன்' போல செயல்படு வாராம்.

''கல்யாணம் ஆன இவர், ஒரு லேடி போலீசோட பழகியிருக்கார். ஒரு நாள் ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரட்டுமான்னு தோழிகிட்ட கேட்ருக்காரு. தோழியும் சரின்னு சொல்லியிருக்காங்க.

''இதை சாக்கா வச்சிட்டு போதைல, தோழி வீட்டுக்குப் போயிருக்காரு. அத்துமீறப் பார்த்திருக்காரு.

''ஷாக்கான தோழி உயரதிகாரிட்ட புகார் கொடுத்துட்டாங்க. விசாரணை நடந்திட்டிருக்கு.

''சிட்டி ஏ.சி. ஒருத்தரு, சொந்த வாகனத்துக்கு அரசு ஒதுக்குற பெட்ரோலை பயன்படுத்துறாருன்னு ஏற்கனவே சொல்லியிருந்தோம்ல.

''கொஞ்ச நாள் சைலண்டா இருந்தவரு, இப்ப எலக்ட்ரிக் கார் வாங்கிட்டாராம். மாநகர எல்லை வரை கொண்டுபோய் இந்தக் காரை நிறுத்திக்கிறாராம்.

''ஜீப்பை அங்க வரச்சொல்லி பெட்ரோல் எல்லாம் எடுத்துக்கிறாராம். கேட்டா நான் எலக்ட்ரிக் கார்தான் பயன்படுத்துறேன். எனக்கு எதுக்கு பெட்ரோல்ன்னு 'நல்ல பிள்ளை' மாதிரி நடிக்கிறாராம்; கமிஷனரோட கடைக்கண் பார்வை, ஏ.சி. மேல விழுந்தா பரவாயில்லை.

''இதே ஏ.சி., கட்டுப்பாட்டு அறையில் இருக்கிற ஒரு போலீஸ்காரர் தொடர்பா விவரங்களைக் கேட்டு நச்சரிச்சாராம்.

''கமிஷனரை கேக்காம கொடுக்க முடியாதுன்னு அவங்க சொன்னவுடனே, உயரதிகாரியைக் களங்கப்படுத்துற மாதிரி, கோர்ட்ல பெட்டிஷன் போடச்சொல்லி, அங்க இருக்கிற இன்னொரு போலீஸ்காரருக்கு ஐடியா கொடுக்கிறாராம்''

''மித்து, நம்ம 'ரமேஷ்' எப்ப வருவாப்டின்னு தெரியல... வந்தா கடைக்குப் போகச் சொல்லணும்''

''சித்ராக்கா, மாநகர மையப்பகுதில இருக்கிற ஸ்டேஷன்ல ஒரு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு போகணும்ன்னு ரொம்பவே ஆசை.

''இதுக்காக போண்டா டீயோட, ஏ.சி.யை சந்திச்சு இப்ப இருக்கிற சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டரைப் போட்டுக்கொடுக்கிறாராம்''

''மித்து... ரமேஷ் இல்லைன்னா 'ரஞ்சித்' வந்தாலாவது கடைக்குப் போகச்சொல்லலாம்''

பேச்சை மாற்றினாள் சித்ரா.

காத்திருந்த குழந்தைகள் ''சித்ராக்கா.. அரண்மனைப்புதுார் பள்ளில மாற்றுத்திறனாளி மதிப்பீட்டு முகாம் நடந்துச்சு... காலை 9:00 மணிக்கு துவங்குறதா சொன்னதால மாற்றுத்திறனாளி குழந்தைங்க, தங்களோட பாதுகாவலரோட ஆஜராயிருந்தாங்க...

''உடனே மருத்துவ முகாமை ஆரம்பிக்காம, கலெக்டர் 10:40 மணிக்கு வந்த பிறகுதான் ஆரம்பிச்சாங்களாம்.

''கலெக்டர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வச்சுட்டாங்களேன்னு பெற்றோர்கள் ஆதங்கப்பட்டாங்க... இது கலெக்டருக்குத் தெரியுமான்னு தெரியல''

மித்ரா நியாயம் கேட்டாள்.

காலி பாட்டில் விவகாரம் ''மித்து... காலி மது பாட்டில் திரும்பப் பெறும் நடைமுறை திருப்பூர்ல பெரும் பிரச்னையைக் கிளப்பியிருக்கு.

''இந்த விவகாரத்துல, டாஸ்மாக் ஊழியர் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரெண்டு பேர் கை தான் ஓங்கியிருக்குதாம்.

''இதில் பதவியில் உள்ள ஒரு ஊழியர், சென்னைத் தலைமையிடத்தில் பணிபுரியற உயர் அதிகாரியோட நெருங்கிய உறவினராம். அவர் வைப்பதுதான் இங்கே சட்டமாம். கடை ஊழியர்களை மட்டுமில்லாம, மாவட்ட மேலாளர்கூட, இவரை மீறி எதுவும் செய்ய முடியாதாம்.

''காலி பாட்டில் விவகாரத்துல பார் உரிமையாளர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்க விரும்பினாங்களாம். இதுக்காக முற்றுகையெல்லாம் நடந்துச்சு.

''இதுல தி.மு.க. - அ.தி.மு.க. காரங்க கலந்து இருக்காங்களாம். ஒரு அமைப்பா ஏற்படுத்தி வலுப்படுத்தலாம்ன்னு திட்டமிட்டாங்களாம்.

''ஆனா, இதுல முன்னிலைப்படுத்திக்கிட்ட சில அ.தி.மு.க. காரங்க சொல்ற கருத்து, விவகாரத்தை திசைதிருப்புற மாதிரி இருக்குது... அவங்க விரும்புற பாதை தப்புன்னு சொல்லி, பார்காரங்கள்ள ஒரு தரப்பு, இவங்க கிட்ட இருந்து ஒதுங்கீட்டாங்களாம்''

வெளிப்படுத்தினாள் சித்ரா.

தெனாவெட்டு ஆபீசர் ''சித்ராக்கா... காங்கயம் ரோட்டுல போக்குவரத்துக்கழக டிப்போ பகுதில ஆக்கிரமிச்சிருந்த, தி.மு.க. - அ.தி.மு.க. - கம்யூ. தொழிற்சங்கத்தோட கட்டடங்களை அகற்றீட்டாங்க. அந்தக் கட்டடங்களுக்கு டெப்போல இருந்துதான் மின் இணைப்பு கொடுத்திருந்தாங்களாம்.

''மித்து... இதெல்லாம் நடக்காம இருந்தாதான் ஆச்சர்யம். காங்கயத்துல அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஒன்னுல, அதிகாரபூர்வமா இல்லாம, ஒரு கல்லுாரி மாணவர் வேலைபார்த்துட்டு வந்தார். சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதா அம்பலமானவுடனே அந்த மாணவரை கைது பண்ணுனாங்க.

''இத்தனை நடந்தும் அங்கு ஆய்வே நடத்தவில்லை என்று விளக்கம் கேட்டு அந்த மாவட்ட அதிகாரிக்கு மாநில அதிகாரிட்ட இருந்து கடிதம் வந்துச்சாம். ஆனா, மாவட்ட அதிகாரி பொருட்படுத்தவே இல்லையாம்.

''முன்பு இந்த அதிகாரி வேலைபார்த்த மாவட்டத்துல ஏற்பட்ட பிரச்னை குறித்து விளக்கம் கேட்டுவந்த கடிதத்துக்கும் அவர் இதுவரைக்கும் விளக்கம் தரலையாம்''

''அக்கா... ஆபீசருக்கு தெனாவெட்டுதான்... பல்லடம் பக்கத்துல, 'மாத - ஊர்' கிராம அதிகாரி பயிர் சாகுபடியே செய்யாத நிலத்துக்குக் கூட 'அடங்கல்' குடுத்திருக்கறாராம்''

''மித்து... விவசாயிகளுக்கு பாடுபடற அதிகாரின்னு சொல்லு... 'காமநாயக்கன்' ஊர்ல, பவர் ஆபீஸ்ல, பேரு மாற்றம், மீட்டர் மாற்றம், புது மீட்டர்க்கு ரேட் பிக்ஸ் பண்ணியிருக்காங்களாம். இதுக்கு தனியா புரோக்கர் வேற...''

''அக்கா... எங்க வீட்டு மின் இணைப்பு விஷயமா ரங்கநாதமூர்த்தி சார் வரச்சொன்னதா அசோக்குமார் சார் சொல்லியிருந்தாரு... சரி பார்த்துட்டு வந்துருலாமாக்கா?''

''மித்து... இதோ ரெடி... அதுக்கு முன்னாடி சுடச்சுட டீ ரெடி''

''மருத்துவ முகாமை காலை 9:00 மணிக்கு ஆரம்பிக்காம, கலெக்டர் 10:40 மணிக்கு வந்த பிறகுதான் ஆரம்பிச்சாங்களாம். கலெக்டர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வச்சுட்டாங்களேன்னு பெற்றோர்கள் ஆதங்கப்பட்டாங்க...''


''ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருத்தர், சென்னை உயர் அதிகாரியோட நெருங்கிய உறவினராம். அவர் வைப்பதுதான் இங்கே சட்டமாம். மேலாளர்கூட, இவரை மீறி எதுவும் செய்ய முடியாதாம்''







      Dinamalar
      Follow us