ADDED : ஜூலை 09, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
அலங்கியம்: ஐ.டி.ஐ.,யில் படித்து வந்த மாணவர் ஒருவர் துாக்கில் தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம், தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் மணிசங்கர், 19. அரசு ஐ.டி.ஐ. கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பாட்டி வீட்டில் பாட்டு கேட்டபடி அறையில் இருந்தார். அறையில் மின்விளக்கை ஏற்றுவதற்காக அவரது பாட்டி சென்ற போது, பேரன் மணிசங்கர் துாக்கில் தொங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
