/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மிட் டவுன் ரோட்டரி நடத்திய ஜூனியர் பேட்மின்டன் போட்டி
/
மிட் டவுன் ரோட்டரி நடத்திய ஜூனியர் பேட்மின்டன் போட்டி
மிட் டவுன் ரோட்டரி நடத்திய ஜூனியர் பேட்மின்டன் போட்டி
மிட் டவுன் ரோட்டரி நடத்திய ஜூனியர் பேட்மின்டன் போட்டி
ADDED : ஆக 30, 2025 12:47 AM

திருப்பூர்; திருப்பூர் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி 'ஜூனியர் பேட்மின்டன் லீக் -2025' போட்டிகள், கணபதிபாளையம் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. ரோட்டரி மாவட்டம் 3203-ல் இருந்து 130 போட்டியாளர்கள் பங்கேற்றனர். சங்கத் தலைவர் வினோத்குமார் வரவேற்றார்.
மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்று விளையாடினர். கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினர்.
சங்க முன்னாள் தலைவர்கள் ஸ்ரீஹரி விக்னேஷ், மந்திராச்சலம், சீனிவாசன், விஜயபெருமாள், உதவி கவர்னர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் சந்துரு ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் மற்றும் ஸ்ரீகுருசர்வா அகாடமி நிறுவனர் அருணாச்சலம் செய்திருந்தார். செயலாளர் பனானா முத்துக்குமார் நன்றி கூறினார்.

