/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கலையரசன்' விருது பெற்ற மாணவர் கலையரசன்
/
'கலையரசன்' விருது பெற்ற மாணவர் கலையரசன்
ADDED : டிச 08, 2025 05:31 AM

பல்லடம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையிலான மாநில கலைத்திருவிழா போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டன.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையிலான, மாநில கலைத் திருவிழா போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் கடந்த மாதம் நடந்தது.
பல்லடம் அடுத்த, கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., பள்ளி மாணவன் கலையரசன், பல குரல் பேச்சு போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது பெயருக்கு ஏற்றவாறு, கலையரசன் என்னும் விருது இவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலையரசனுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரகுமார் புத்தகம் வழங்கி மாணவனை பாராட்டினார். உதவி தலைமை ஆசிரியர் பத்மாவதி, ஆசிரியர்கள் யோகம், பரமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

