/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எம்.சி. பள்ளியில் வள்ளி கும்மியாட்டம்
/
கே.எம்.சி. பள்ளியில் வள்ளி கும்மியாட்டம்
ADDED : டிச 09, 2025 08:18 AM

பெருமாநல்லுார்: பெருமாநல்லுார், கே.எம்.சி. சீனியர் செகண்டரி பொதுப்பள்ளியில், மாநிலத்திலேயே முதன்முறையாக பள்ளி அளவில் நிலாச்சோறு விருந்து நிகழ்வில் வள்ளிக் கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், கம்பத்தாட்டம் ஆகியன நடந்தன.
பள்ளி தலைவர் கே.சி.சண்முகம், லோகநாயகியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனார். தாளாளர் மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் பங்கேற்று பேசினார். பெருமாநல்லுார் ரோட்டரி பட்டய தலைவர் மாந்தோட்டம் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொங்கு பண்பாட்டு மையம் ஆதன் பொன் செந்தில்குமார் குழுவினரின் சலங்கை ஆட்டம், காராளன் கம்பத்து ஆட்டம் ஆகியன நடந்தன. பூளவாடி ராமசாமி, நல்லாசிரியர் விருது பெற்ற ராசு ஆகியோர் தலைமையில் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. பெற்றோர், ஆசிரியர்களுடன் இணைந்து தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா கும்மியாட்டத்தில் பங்கேற்றார்.

