/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெரிய நடைபாதை; குறுகிய சாலை; யாருக்காக இந்த கூத்து?
/
பெரிய நடைபாதை; குறுகிய சாலை; யாருக்காக இந்த கூத்து?
பெரிய நடைபாதை; குறுகிய சாலை; யாருக்காக இந்த கூத்து?
பெரிய நடைபாதை; குறுகிய சாலை; யாருக்காக இந்த கூத்து?
ADDED : டிச 02, 2025 07:10 AM

திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், சாலை குறுகலாகவும், நடைபாதை பெரிதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. யார் பயன் பெறுவதற்காக இந்தக் கூத்து என்ற கேள்வியை மாநகராட்சியிடம் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கான்கிரீட் ரோடு அமைத்துள்ளனர். 'எம்-சாண்ட்' கொண்டு கான்கிரீட் அமைத்ததால், சில மாதங்களிலேயே, கற்கள் தெரியும் அளவுக்கு ரோடு தேய்ந்துவிட்டது. ஸ்மார்ட் ரோட்டில் அமைத்த வேகத்தடையும், ரோட்டுடன் ஒட்டாமல் நிற்பதால், டூ வீலரில் சென்று வருவோர் பாதிக்கப்படுகின்றனர்.
திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட், சக்தி தியேட்டர் ரோட்டில் அமைத்த 'ஸ்மார்ட் ரோடு', நடைபாதையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மிகவும் அகலமான அந்த ரோட்டை, குறுகலாக மாற்றி, நடைபாதையை விசாலாமாக விட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதுதானா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு பணிகள் நடந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சக்தி தியேட்டர் ரோடு, 100 அடி வரை அகலம் இருக்கிறது. இருப்பினும், மையத்தில் மட்டும் கான்கிரீட் ரோடு அமைத்துவிட்டு, தனியார் பயன்பாட்டுக்கு வசதியாக, ரோட்டின் இருபுறமும் பெரிய அளவுக்கு பிளார்ட்பார்ம் அமைத்து கொடுத்துள்ளனர். இதனால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
எதிர்காலத்தில், சக்தி தியேட்டர் பகுதியை ஆய்வு செய்து, ரோட்டோரமாக, மக்கள் நடமாட வச தியான அளவுக்கு மட்டும் நடைபாதையை சுருக்க வேண்டும்; ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்,' என்றனர்.

