/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடற்புழு நீக்க மாத்திரை; இன்று முதல் முகாம்கள்
/
குடற்புழு நீக்க மாத்திரை; இன்று முதல் முகாம்கள்
ADDED : பிப் 10, 2025 07:31 AM
திருப்பூர் : குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் இன்று துவங்குகிறது.
உடலில் உருவாகும் 'ஹெல்மின்த்ஸ்' எனும் ஒட்டுண்ணி புழுக்கள் இரைப்பைக் குழாயின் பல்வேறு பகுதிகளில் தங்குகிறது; இதன் மூலம் ரத்தசோகை ஏற்படுகிறது; பிற சுகாதார சிக்கல்கள் உருவாகி, வட்ட, கொக்கி, நாடாப்புழுக்கள் உருவாகி விடுகின்றன.
இவ்வாறு உருவாகும் ஒட்டுண்ணி புழுக்கள் ஊட்டச் சத்துகளை தின்று, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல்நலப் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. இத்தகைய உடலில் உருவாகும் 'ஹெல்மின்த்ஸ்' எனும் ஒட்டுண்ணி குடற்புழுக்களை நீக்க, குடற்புழு நீக்க மாத்திரை பொது சுகாதாரத்துறையால் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' கிடைக்கிறது.
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, இன்று முதல் குடற்புழு நீக்க முகாம் நடத்தப்படுகிறது.
இதில், ஒன்று முதல் 19 வயதினர் வரை மற்றும் 20 முதல் 30 வயதினர் வரை என, இரு பிரிவுகளாக குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப் படுகிறது. இன்று துவங்கி 18-ம் தேதி வரையும்; 19 முதல் 25ம் தேதி வரையும் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

