/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழக அணிக்கு தேர்வு மாணவனுக்கு பாராட்டு
/
தமிழக அணிக்கு தேர்வு மாணவனுக்கு பாராட்டு
ADDED : டிச 08, 2025 05:36 AM

உடுமலை: தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவனுக்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில், மிக மூத்தோர் பிரிவு மாணவர் ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டி விழுப்புரத்தில் நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து இந்த தேர்வில், மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவன், யோகேஸ்வரன், தமிழக அணியில் விளையாட தேர்ச்சி பெற்றார். இம்மாணவன் ராஜஸ்தானில் நடைபெறும் தேசிய போட்டியில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்.
தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு பெற்ற மாணவனை, பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.

