/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் தொழிலாளர் பணி நேரத்தில் தளர்வு; பின்னலாடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு

ADDED : டிச 02, 2025 07:05 AM

திருப்பூர்: ''பெண் தொழிலாளர் பணி நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், ஆண்களுக்கு இணையாக வருவாய் ஈட்ட வாய்ப்பு உருவாகியுள்ளது'' என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலாகியுள்ளன; இது தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், ஆடை வடிவமைப்பு பிரிவில், 70 சதவீதம் பேர் பணியாற்றுகின்றனர்.
பெண்களுக்கு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருந்தாலும், பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் இருந்தன. பின்னலாடை நிறுவனங்களை பொறுத்தவரை, எட்டு மணி நேரத்துக்கு ஒரு 'ஷிப்ட்' என்ற வகையில், தினமும், ஒன்றரை 'ஷிப்ட்' உற்பத்தி நடக்கிறது.
இருப்பினும், பெண் தொழிலாளர் ஒரு 'ஷிப்ட்' மட்டுமே பணியாற்ற முடிந்தது.
விருப்பத்தின் அடிப்படையில், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், இரவு, 7:00 மணிக்கு பிறகும் பெண் தொழிலாளர் பணியாற்றலாம் என, புதிய தொழிலாளர் சட்டத்தில் நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், திறமை வாய்ந்த பெண் தொழிலாளர், கூடுதல் வருவாய் ஈட்டவும் வாய்ப்புஉருவாகியுள்ளதாக, தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.