/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 30, 2025 11:49 PM

திருப்பூர்:போக்குவரத்து விழிப்புணர்வு மாத விழா முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் இதய பரிசோதனை முகாம் ஆகியன நடந்தது.
திருப்பூர் மாநகர கொங்கு நகர் போக்குவரத்து காவல், காந்தி நகர் ரோட்டரி சங்கம், ரேவதி மருத்துவமனை மற்றும் ரேவதி கல்வி நிறுவனங்கள் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது. திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பில் துவங்கிய ஊர்வலம், ரேவதி மருத்துவமனையில் நிறைவடைந்தது.
இதில் ரேவதி கல்வி நிறுவன மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர், போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர். சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர். முன்னதாக அங்கு இதயம் காப்போம் பேருந்து திட்டத்தில் செயல்படும் வாகனத்தில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச இதய பரிசோதனை நடத்தப்பட்டது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், ரேவதி மருத்துவமனை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, காந்தி நகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

