/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலி மது பாட்டிலுக்கு ரூ.10 திட்டம் அமல்
/
காலி மது பாட்டிலுக்கு ரூ.10 திட்டம் அமல்
ADDED : டிச 02, 2025 06:33 AM
உடுமலை: டாஸ்மாக் மதுக்கடைகளில் வாங்கும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெற்றுக் கொள்வது; காலி மது பாட்டிலைத் திரும்பத் தரும் போது அந்த 10 ரூபாயை வாடிக்கையாளருக்கு வழங்கும் திட்டம் தமிழகம் முழுதும் அமலாக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இத்திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
திருப்பூர் டாஸ்மாக் மதுக்கடைகளில் இத்திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் கடை ஊழியர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். சிலர் இதை வரவேற்றாலும் பலரும் இதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
கூடுதலாக 10 ரூபாய் கேட்பதை பலரும் விரும்பவில்லை. ஒரு சிலர் மட்டுமே காலி பாட்டிலை திரும்ப அளித்தனர். பலர் அதை கண்டு கொள்ளவில்லை.

