/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அஞ்சல் துறை சார்பில் இன்று சிறப்பு முகாம்
/
அஞ்சல் துறை சார்பில் இன்று சிறப்பு முகாம்
ADDED : நவ 14, 2025 12:14 AM
திருப்பூர்: இந்திய அஞ்சல் துறை சார்பில் குழந்தைகள் தினமான இன்று, குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் அஞ்சல் கோட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இது குறித்து, திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியதாவது:பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான கணக்கு (பி.பி.எப். - 7.1 சதவீத வட்டி, ஆர்.டி. - 6.7 சதவீத வட்டி) 10 வயது பெண் குழந்தைகளுக்கான கணக்கு (எஸ்.எஸ்.ஏ. - 8.2 சதவீத வட்டி) மற்றும் அஞ்சலக கணக்குகளுக்கு ஏ.டி.எம்., இணைய அல்லது மொபைல் பேங்கிங் வசதி மற்றும் காகிதமில்லா பணபரிவர்த்தனை (இ.கே.ஒய்.சி.) ஆகிய அஞ்சலக டிஜிட்டல் சேவைகளில் இணைந்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளலாம். மற்றும் www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

