தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

 ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

 ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்


ADDED : ஜூலை 02, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 03:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரண்மனைப்புதுார்: திருப்பூர், ஷெரீப் காலனி, அரண்மனைப்புதுார் முதல் வீதியில் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்று வரும், 5ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று முதல் துவங்கியது. விநாயகர் வழிபாடு, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன், வாஸ்து சாந்தி, தன பூஜை நடந்தது. விழாவில், இன்று சாந்தி ஹோமங்கள் மற்றும் ஷெரீப் காலனி விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்து வருதல், பெருஞ்சலங்கை ஆட்டம் ஆகியன நடக்கிறது.

நாளை கோபுர கலசங்கள் வைத்தல் மற்றும் மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவக்கம். 4ம் தேதி இரண்டாம் கால யாகம், மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை மூன்றாம் கால யாகம், 5ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 6:00 மணி - ஸ்ரீ அன்பு விநாயகர், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் தெய்வங்களுக்குக் கும்பாபிஷேகம்.

காலை 9:45 மணி - ஸ்ரீ மாகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, 5ம் தேதி காலை, 11:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடுப்பங்கு தோட்டத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us