/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கிரிக்கெட்; திருப்பூர் மாணவி தேர்வு
/
மாநில கிரிக்கெட்; திருப்பூர் மாணவி தேர்வு
ADDED : டிச 09, 2025 07:46 AM
மாவட்ட அளவிலான போட்டி 15, 19, 23 வயது பிரிவு மற்றும் சீனியர் என்று நான்கு பிரிவுகளாக தேனியில் நடந்தது. அதில் 700 பேர் ஆர்வம் காட்டி, 60 பேர் தேர்வாகி விளையாடினர்.
பின், பல மாவட்டங்களிலிருந்தும் மாநில அளவிலான போட்டிக்கு பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் திருப்பூரை சேர்ந்த தேவதர்ஷினி, 15 வயது பிரிவில் தேர்வாகியுள்ளார்.
தேவதர்ஷினி கூறியதாவது:
மூன்றாம் வகுப்பிலிருந்தே எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. அதற்கு என் தந்தை தான் காரணம். சிறு வயதில், அவர் கிரிக்கெட் விளையாடுவதை அவருடன் சென்று பார்ப்பேன். அருகிலுள்ள அகாடமியில் சேர்ந்தேன். முதல் நாளிலேயே நன்றாக விளையாடியதால் பாராட்டினர். நானும் கிரிக்கெட்டை தொடர ஆரம்பித்தேன். பெண்கள் கிரிக்கெட் மாநில போட்டிக்கு தேர்வாகியிருப்பது எனக்கு மட்டுமல்லாமல் என் பயிற்சியாளர், பெற்றோர்க்கும் பெருமையாக சேர்க்கிறது. கிரிக்கெட் போலவே தடகளத்திலும் ஆர்வம் இருக்கிறது. இவ்வாறு, தெரிவித்தார்.
- நமது நிருபர் -:

