/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றிக்கு அச்சாரம்; வரமாய் வந்த வருண்
/
வெற்றிக்கு அச்சாரம்; வரமாய் வந்த வருண்
ADDED : பிப் 04, 2025 07:20 AM

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்கில்வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஐந்தாவது போட்டியில் அபிேஷக் சர்மா அடித்த அதிரடி சதம், பந்து வீச்சாளர்களின் அனல் தெறித்த பந்து வீச்சு ஆகிய வற்றை தொலைக்காட்சியில் கண்டுகளித்த திருப்பூரைச் சேர்ந்த ரசிகர்கள் கூறியதாவது:
அபிேஷக் சர்மாவின் சரவெடி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா போன்றவர்களும் இந்த தொடரில் கலக்கினர்.
தொடரில் வருண் சக்கரவர்த்தி, பிஷ்னோய், அக்ஷார் படேல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சு அபாரமாக உள்ளது.இவர்களை சர்வதேச, 50 ஓவர் ஒரு நாள் போட்டிக்கும் பயன்படுத்தலாம்.
திலக் வர்மா சிறந்த பேட்ஸ்மேனாக மாற வாய்ப்புள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடரை வென்றுள்ளார். முன்பெல்லாம் சுழற்பந்து வீச்சு என்றால் இந்திய பேட்ஸ்மேன்கள் கலக்குவர்.
தற்போதோ சுழற்பந்து வீச்சுக்கு சற்று திணறும் நிலை உள்ளது.பேட்ஸ்மேன் திறன் வளர வேண்டும். இந்த தொடரின் வெற்றிக்கு வருண் சக்கரவர்த்தி வரமாக அமைந்தார்.
வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் போன்று மேலும் தமிழக வீரர்கள் நம் அணியில் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

