/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எண்ணம் சிவம்; எல்லாம் ஜெயம்'
/
'எண்ணம் சிவம்; எல்லாம் ஜெயம்'
ADDED : டிச 08, 2025 05:32 AM

திருப்பூர்: பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு 'சைமா' தலைவர்சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
ஸ்ரீ விவேகானந்தா சேவாலய நிறுவனர் செந்தில்நாதன், ஸ்ரீசக்தி ஜூவல்லரி நிறுவனர் சக்தி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
'ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்ற தலைப்பில் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
எந்தவொரு அமைப் போ இயக்கமோ ஒரு தலைவரின் வழிகாட்டுதலில் செல்லும். அதன்தலைவர் வெறும் வழிகாட்டியாக இல்லாமல் களத்தில் முன் நிற்பவராக இருக்க வேண்டும்.
அப்படித்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் செயல்பட்டார். அதிகாரம் செய்வதும், ஆலோசனை சொல்வதும் மட்டும் ஒரு தலைவனுக்கு அழகில்லை.
எந்த களத்திலும் முன் நிற்க வேண்டும். ஜான்சி ராணி லட்சுமி பாய் அப்படித்தான் தன் படையை வழி நடத்தினார். படைக்கலத்தில் தன் உயிரை இழந்தார். அப்படித்தான் ஊருக்கு உழைத்திட வேண்டும். அதைத்தான் ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று குறிப்பிடுவர்.
இவ்வாறு ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.
'வசந்த வாசல்' என்ற தலைப்பில் சேலம் தேவி குணசேகரன் பேசியதாவது:
பாரதியும், விவேகானந்தரும் ஆன்மிகத்துடன் இணைந்த சிந்தனையை வளர்த்தனர். தேசப் பற்றையும் தம் சிந்தனை மற்றும் படைப்பில் சேர்த்து ெவளிப்படுத்தினர். அதனால் தான் அவர்கள் படைப்புகள் அன்றும், இன்றும்,என்றும் நிலைத்திருக்கின்றன.
ராமனின் இதயத்தை நோக்கி அம்பு எய்த போது தான் ராவணனுக்கு மரணம் ஏற்பட்டது. இதற்கு காரணம் சிவபக்தனான ராவணன் தலை, கை எல்லாம் சிவனையே வணங்கி சேவித்தது தான். ஆனால், அவன் இதயத்தில் சிவனை தாங்காமல், சீதையைத் தான் தாங்கினான்.
மனமது துாய்மையானால் மந்திரம் தேவையில்லை. எண்ணத்தில் சிவனை வைத்திருந்தால் எல்லாம் ஜெயமாகும். நமக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினால் வசந்த வாசல் திறக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

