/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவிக்கு அனுமதி சுற்றுலா பயணியர் உற்சாகம்
/
பஞ்சலிங்க அருவிக்கு அனுமதி சுற்றுலா பயணியர் உற்சாகம்
பஞ்சலிங்க அருவிக்கு அனுமதி சுற்றுலா பயணியர் உற்சாகம்
பஞ்சலிங்க அருவிக்கு அனுமதி சுற்றுலா பயணியர் உற்சாகம்
ADDED : டிச 08, 2025 05:43 AM

உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு, 4 நாட்களுக்குப்பின் நேற்று அனுமதியளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த, 3ம் தேதி முதல், சுற்றுலா பயணியர், பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மலைப்பகுதிகளில் மழை குறைந்து, அருவியில் நீர் வரத்து சீரானதையடுத்து, நேற்று காலை முதல் அருவிக்குச்செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
சபரிமலை சீசன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் விடுமுறை தினமான நேற்று திருமூர்த்திமலைக்கு வந்திருந்த சுற்றுலா பயணியரும், அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அதே போல், மலையடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

