/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயிரம் யூனிட் கிராவல் மண் கடத்தல்? தாசில்தார் சிறைப்பிடிப்பு! அனுப்பட்டியில் கிராம மக்கள் ஆவேசம்
/
ஆயிரம் யூனிட் கிராவல் மண் கடத்தல்? தாசில்தார் சிறைப்பிடிப்பு! அனுப்பட்டியில் கிராம மக்கள் ஆவேசம்
ஆயிரம் யூனிட் கிராவல் மண் கடத்தல்? தாசில்தார் சிறைப்பிடிப்பு! அனுப்பட்டியில் கிராம மக்கள் ஆவேசம்
ஆயிரம் யூனிட் கிராவல் மண் கடத்தல்? தாசில்தார் சிறைப்பிடிப்பு! அனுப்பட்டியில் கிராம மக்கள் ஆவேசம்
ADDED : ஜூலை 25, 2024 11:06 PM

பல்லடம் : ஆயிரம் யூனிட் கிராவல் மண் கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்திருந்த அனுப்பட்டி கிராம மக்கள், ஆய்வு செய்ய வந்த தாசில்தாரை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், 285 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியுள்ளார். அவ்வகையில், பல்லடம் ஒன்றியத்தில், கரைப்புதுார், கரடிவாவி, செம்மிபாளையம், பருவாய், அனுப்பட்டி, புளியம்பட்டி பல்வேறு கிராமங்களில் உள்ள குளம் - குட்டைகளிலும் மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனுப்பட்டி கிராமத்தில் உள்ள குட்டையில், கடந்த சில தினங்களாக மண் அள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் அல்லாத சிலரால், ஆயிரம் யூனிட் கிராவல் மண் கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
புகாரைத் தொடர்ந்து, நேற்று ஆய்வு செய்ய வந்த தாசில்தார் ஜீவாவை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
நுாற்றுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மண் அள்ள அனுமதி கேட்டுள்ளோம். ஆனால், கிராமத்துக்கு தொடர்பு இல்லாத சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டு, இன்று, ஆயிரம் யூனிட் கிராவல், மண் குட்டையில் இருந்து கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தினமும், 160 லாரிகள் மூலம் மண் எடுக்கப்பட்டுள்ளது. தடுக்க முயன்ற எங்கள் மீது லாரி ஏற்றி கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர். விவசாயிகளான எங்களுக்கு மண் அள்ள அனுமதிக்கும் வரை யாரையும் மண் எடுக்க விட மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பி.டி.ஓ.,விடம் வாக்குவாதம்
முன்னதாக, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், தாசில்தார் வாகனத்தை வழிமறித்து நின்றனர். இதனால், அமைச்சர் கூட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறி, தாசில்தார், வி.ஏ.ஓ.,வுடன் டூவீலரிலேயே புறப்பட முயற்சிக்க, கிராம மக்கள் வழி விட்டனர். தொடர்ந்து, பி.டி.ஓ., மனோகரன் அங்கு வர, அவரிடமும் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக, மண் அள்ள வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், அனுப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

