இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி; கால்நடைத்துறை சார்பில் விழிப்புணர்வு
இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி; கால்நடைத்துறை சார்பில் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 01, 2026 06:28 AM
பல்லடம்: பல்லடம், வடுகபாளையம் கால்நடை மருத்துவர் அன்பரசு கூறியதாவது:
வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். ஆனால், கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்நோய் தாக்கப்பட்ட கால்நடைகளில் பால் உற்பத்தி குறைந்து, எடை இழப்பு, கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, இறுதியில் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
இதிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுக்கு இருமுறை, கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போடுவதால், கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவற்றின் இறப்பை தடுக்கிறது. பால் உற்பத்தி பாதுகாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பும் தவிர்க்கப்படுகிறது.
எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள், அனைத்து மாடுகள், எருமைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் ஆகியவற்றுக்கு, அவசியம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும், இன்று முதல், 10ம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
