7 மூட்டை கடிதங்களை வழங்காமல் மறைத்த வெள்ளகோவில் போஸ்ட்மேன் 'சஸ்பெண்ட்'
7 மூட்டை கடிதங்களை வழங்காமல் மறைத்த வெள்ளகோவில் போஸ்ட்மேன் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 03, 2026 04:10 AM
காங்கேயம்:கடிதங்களை வினியோகம் செய்யாமல், மூட்டை கட்டி மறைத்த, வெள்ளகோவில் போஸ்ட்மேன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பூர்
மாவட்டம் வெள்ளகோவில் தபால் நிலையத்தில் கிராம கடை நிலை ஊழியராக
கடந்த, 15 ஆண்டுகளாக வேலை பார்த்தவர் காங்கேயத்தை சேர்ந்த
செந்தில்குமார், 45; சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலம்
பாதித்துள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்,
செந்தில்குமாரின் வீட்டருகே வசிப்பவர்கள், அவரது வீட்டு பின்புறம்
கவர், லெட்டர் அடங்கிய மூட்டை கிடப்பதை பார்த்து, திருப்பூர்
தபால்துறைக்கு புகாரளித்தனர். இதன் அடிப்படையில் நடந்த சோதனையில்,
ஏழு மூட்டைகளில் தபால் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களுக்கு வந்த
அரசு ஆவணங்கள், அரசு அலுவலகங்களுக்கு வழங்க வேண்டிய தபால்
உள்ளிட்டவற்றை வழங்காதது தெரிய வந்தது. அவரை பணியிடை நீக்கம்
செய்து, திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன்
உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக துணை ரீதியான விசாரணை
நடக்கிறது. ஆறு மாதமாக அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதும்
முதல்கட்டமாக தெரியவந்தது. தற்போது டெலிவரி செய்யப்படாத
தபால்கள், உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,
தபால்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
