sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர் யார்? ஓட்டளிக்க தயாராகும் திருப்பூர் மக்கள்

/

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர் யார்? ஓட்டளிக்க தயாராகும் திருப்பூர் மக்கள்

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர் யார்? ஓட்டளிக்க தயாராகும் திருப்பூர் மக்கள்

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர் யார்? ஓட்டளிக்க தயாராகும் திருப்பூர் மக்கள்


ADDED : மார் 16, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 16, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:லோக்சபா தேர்தல் நடத்தப்படும் தேதி ஏப்., 19 என, அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், 'டாலர்' சிட்டியில் வசிக்கும் வாக்காளர்கள், தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வேட்பாளரை அடையாளம் காண தயாராக இருக்கின்றனர்.

ஆடைத் தொழிலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் தனி இடம் பிடித்துள்ள திருப்பூரில், விசைத்தறி, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையும் பிரதான தொழில்களாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில், முக்கியப் பங்காற்றும் திருப்பூரில், தொழில்துறையின் வளர்ச்சி, நீடித்த நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது, தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களின் போது, பனியன் தொழிலில் சரிவு தென்பட்டாலும், மீண்டும் தொழிலை துாக்கி நிறுத்த, தொழில் துறையினர் காட்டும் முனைப்பு பாராட்டுக்குரியது. தங்களது இலக்கை நோக்கி தொழில் துறையை நகர்த்துவதில், அவர்கள் தளர்ந்து போவதில்லை.

அதேநேரம், 'ஆயத்த ஆடைத் தொழில் செழிப்புற இருக்கிறது' என்ற கருத்தை, தொழில் துறையை சேர்ந்த சில தரப்பினர் ஏற்க மறுக்கின்றனர். 'பஞ்சு, நுால் விலை; சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகளில் நிலவும் தடுமாற்றம் ஆகியவை சரி செய்யப்படவில்லை' என்பது, அவர்களின் ஆதங்கம். தென்னை விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள், இம்முறை தேர்தலில் சற்று பலமாகவே எதிரொலிக்கும் என, எதிர்பர்க்கப்படுகிறது.

தொழில் துறையினர் உட்பட அனைத்து தரப்பினரின் பிரச்னைகளுக்கும் லோக்சபாவில் குரல் கொடுத்து, அதற்கு தீர்வு ஏற்படுத்தி தரக்கூடிய மக்கள் பிரதிநிதி தேவை என்ற வாக்காளர்களின் எதிர்பார்ப்பை இம்முறை அதிகமாகவே உணர முடிகிறது.

ஊரக பகுதிகளான பல்லடம், அவிநாசி, தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் விவசாய, விசைத்தறி உள்ளிட்ட தொழில்கள் நிரம்ப உள்ளன; தொழில்துறையினர் முன்வைத்துள்ள, மின் கட்டண உயர்வு பிரச்னைக்கு, இனியும் தீர்வு கிடைத்தபாடில்லை. இவ்வாறு, பல வளர்ச்சி தென்பட்டாலும், சில சரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றை திட்டமிட்டு சரி செய்யக்கூடிய வேட்பாளருக்காக, திருப்பூர் மக்கள் காத்துள்ளனர்.

5 எம்.பி., தேர்ந்தெடுக்கும்

ஒரு மாவட்ட வாக்காளர்திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள், 5 எம்.பி.,க்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகள், திருப்பூர் லோக்சபா தொகுதியில் உள்ளன. பல்லடம் சட்டமன்ற தொகுதி, கோவை லோக்சபா தொகுதியிலும்; காங்கயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகள், ஈரோடு லோக்சபா தொகுதியிலும் உள்ளன. அவிநாசி சட்டமன்ற தொகுதி, நீலகிரி லோக்சபா தொகுதியிலும்; மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிகள், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியிலும் உள்ளன. அதன்படி, திருப்பூர் மாவட்ட மக்கள் திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி, கோவை என, 5 எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர்.



'சிட்டிங்' எம்.பி.,க்களுக்கு

கடமையுண்டு!திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கி, 5 எம்.பி.,க்கள் உள்ள நிலையில், தங்கள் தொகுதிக்குட்பட்டு, கடந்த ஐந்தாண்டில் தொகுதியின் வளர்ச்சிக்கு செய்தது என்ன, தொழில் துறையினர், விவசாயிகளின் கோரிக்கைகள், அதற்கு பெற்றுத்தந்த தீர்வுகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதேநேரம், லோக்சபாவில் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எந்தளவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது, நிலுவையில் இருக்கிறதா என்பதை விளக்கும் பட்சத்தில், வாக்காளர் மத்தியில் தெளிவு கிடைக்கும்.








      Dinamalar
      Follow us