/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜாப் ஒர்க்' நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
/
'ஜாப் ஒர்க்' நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
'ஜாப் ஒர்க்' நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
'ஜாப் ஒர்க்' நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
ADDED : டிச 07, 2025 07:02 AM
தி ருப்பூர் பின்னலாடை தொழிலில், நுாலிழையை துணியாக்கும் 'நிட்டிங்', துணிக்கு சாயமிடும் சாய ஆலைகள், சலவை செய்த துணியின் சுருக்கம் நீக்கி பக்குவப்படுத்தும் 'காம்பாக்டிங்', குளிர்கால ஆடைக்காக துணியை தயார்படுத்தும் 'ரைசிங்', மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கான பிரின்டிங் மற்றும் கம்ப்யூட்டர் எம்பிராய்டரிங் என, எட்டுக்கும் மேற்பட்ட துறைகளில் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் உள்ளன.
அதிக பொருட்செலவில், இறக்குமதி செய்த இயந்திரங்களை நிறுவி, சாய ஆலைகள், நிட்டிங் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 'எங்களுக்கு முதலீட்டு செலவு மிக அதிகம்; வருவாய் வரவு மிக குறைவு' என்று ஜாப் நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மத்திய, மாநில அரசு திட்டங்கள் அறிவிக்கப்படும் போது, ஆடை உற்பத்தியாளர் மட்டுமே நேரடியாக பயன்பெற முடிகிறது. சேவை அடிப்படையில் இயங்கும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு சலுகைகள் சென்று சேர்வதில்லை.
அமெரிக்க வரி உயர்வால், பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளருக்காக, 'ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், வட்டி சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தங்களுக்கும், சலுகை திட்ட பயன் கிடைக்க வேண்டுமென, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், கம்ப்யூட்டர் எம்பிராய்டர்ஸ் அசோசியஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் குழுவாக சென்று, மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஒட்டுமொத்த தொழில்துறையினருக்காக அரசின் திட்டங்கள் இருக்க வேண்டும் ஆடை உற்பத்தியில், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் பங்களிப்பு மிக முக்கியமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, சாய ஆலைகள், பிரின்டிங் ஆலைகள் அதிகம் செலவழித்து வருகின்றன. இருப்பினும், அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அரசு திட்டம், ஒட்டுமொத்த தொழில்துறையினருக்காக இருக்க வேண்டும். மாறாக, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் பயன்பெறுகின்றன. மத்திய அரசு, தற்போது அறிவித்துள்ள திட்டங்கள், தொடர்புடைய 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் தளர்வு வழங்க வேண்டும். முழுமையான வங்கிக்கடன் மீதான சலுகையும் கிடைக்க வேண்டும். - 'ஜாப் ஒர்க்' நிறுவனத்தினர்

