/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு அருங்காட்சியகம் அமையுமா? இடம் தேர்வில் நீடிக்கும் இழுபறி
/
அரசு அருங்காட்சியகம் அமையுமா? இடம் தேர்வில் நீடிக்கும் இழுபறி
அரசு அருங்காட்சியகம் அமையுமா? இடம் தேர்வில் நீடிக்கும் இழுபறி
அரசு அருங்காட்சியகம் அமையுமா? இடம் தேர்வில் நீடிக்கும் இழுபறி
ADDED : டிச 07, 2025 07:00 AM
திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என்ற அறிவிப்பு வெளியாகி, 9 மாதம் கடந்துவிட்ட நிலையில், இடம் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.
கடந்த, 2009ல், திருப்பூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் உள்ள திருப்பூரில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் சின்னங்கள் அதிகளவில் உள்ளன. அமராவதி, நொய்யல், நல்லாறு, கவுசிகா உள்ளிட்ட நதிக்கரைகள், தொன்மையான நாகரிகத்தின் அடையாளங்களாக விளங்குகின்றன. ஊத்துக்குளி குமரிக்கல்பாளையத்திலும், 2,000ம் ஆண்டுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக, தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
'இதுபோன்ற தொல்லியல் எச்சங்களை காட்சிப்படுத்தவும், மாணவ சமுதாயத்தினர், பொது மக்களுக்கு அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது.
கடந்த ஏப்., 18ம் தேதி, அமைச்சர் சாமிநாதன், 'திருப்பூர் மற்றும் துாத்துக்குடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என, தமிழக சட்டசபையில் அறிவித்தார். இதை தொடர்ந்து, 'திருப்பூர் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்க இடம் ஏற்பாடு செய்ய தர வேண்டும்' என, அருங்காட்சியக துறை சார்பில், கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், அரசு அருங்காட்சியகம் அமைக்க இடம் அல்லது கட்டடம் என, எதுவாக இருப்பினும் ஏற்பாடு செய்து தருமாறு, கருத்துரு அனுப்பியுள்ளோம். இடம் தேர்வான பிறகு, அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். - அரசு அருங்காட்சியகத் துறையினர்.

