ADDED : ஜூலை 01, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
காங்கயம்: காங்கயத்தில், பெண்ணிடம், நான்கு சவரன் நகையை பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், முல்லை நகரை சேர்ந்தவர் உமாவதி, 50. இவர் நேற்று முன்தினம் டூவீலரில் கரூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பின்னால் டூவீலரில் வந்த நபர்கள், உமாவதி கழுத்தில் அணிந்திருந்த, நான்கு சவரன் நகையை பறித்து சென்றனர். புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
