/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
350 ஆண்டு பழைய கல்வெட்டு தி.மலை அருகே கண்டெடுப்பு
/
350 ஆண்டு பழைய கல்வெட்டு தி.மலை அருகே கண்டெடுப்பு
ADDED : ஆக 29, 2024 02:23 AM

திருவண்ணாமலை,:திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையிலான குழுவினர், திருவண்ணா மலை அடுத்த தச்சம்பட்டில், முருகன் கோவில் குளக்கரையில் இரு கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.
ஒரு கல்வெட்டில் குறு நில மன்னன் தன் மனைவியுடன் கூடிய பலகை கல் சிற்பமும், மற்றொரு கல்வெட்டில் கிருஷ்ணப்பநாயக்கர் குளம், தர்ம சத்திரம் கட்டியுள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை, 350 ஆண்டு பழமையானவை.
மேலும் ஒரு கல்வெட்டு, அப்பகுதி சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. அதில், 'நாப்பு துரை விடுதி' என்று எழுதப்பட்டுஉள்ளது.
இதை ஆய்வு செய்ததில், 1909 - 1910ம் ஆண்டில், தென்னாற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த நாப்பு துரை என்பவர், தன் பணி காலத்தில் அமைத்த தங்குமிடம் என கருதப்படுகிறது.

