/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
துாய்மை பணியாளர்களுக்கு தி.மலையில் சிறப்பு தரிசனம்
/
துாய்மை பணியாளர்களுக்கு தி.மலையில் சிறப்பு தரிசனம்
துாய்மை பணியாளர்களுக்கு தி.மலையில் சிறப்பு தரிசனம்
துாய்மை பணியாளர்களுக்கு தி.மலையில் சிறப்பு தரிசனம்
ADDED : டிச 07, 2025 07:12 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவில் சேகரமான, 250 டன் குப்பையை அகற்றிய துாய்மை பணியாளர்களுக்கு, அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நவ., 24 முதல் டிச., 3 வரை, 10 நாட்கள் தொடர்ந்து நடந்து வந்தது.
விழாவில், பக்தர்கள் பயன்படுத்திய பொருட்களால் ஏற்படும் குப்பையை அகற்ற, திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளை சேர்ந்த, 2,000 துாய்மைப்பணியாளர்கள் இரவு பகலாக துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதில், பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட, 250 டன்னுக்கும் மேலான குப்பையை அகற்றினர். இதையடுத்து, நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், துாய்மை பணியாளர்களின் செயலுக்கு நன்றி தெரிவித்தார்.
தற்போது, அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய பக்தர்கள், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில், டி.ஆர்.ஓ., ராம்பிரதீபன் தலைமையில், துாய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், சிறப்பு தரிசனம் செய்தனர்.

