/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
காரில் பதுக்கி 'சரக்கு' விற்ற திருச்சி போலீஸ்காரர் கைது
/
காரில் பதுக்கி 'சரக்கு' விற்ற திருச்சி போலீஸ்காரர் கைது
காரில் பதுக்கி 'சரக்கு' விற்ற திருச்சி போலீஸ்காரர் கைது
காரில் பதுக்கி 'சரக்கு' விற்ற திருச்சி போலீஸ்காரர் கைது
ADDED : டிச 07, 2025 07:48 AM

திருச்சி: திருச்சியில் காரில் பதுக்கி சரக்கு விற்ற போலீஸ்காரரை, மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி விமானநிலையத்தில் காரில் பதுக்கி வைத்து, புதுச்சேரி மதுபானங்களை விற்பனை செய்வதாக, திருச்சி மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் விமான நிலையம் காவேரி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்ற 'ஸ்விப்ட் டிசையர்' காரை சோதனையிட்டபோது, அதில், 212 புல் மதுபாட்டில்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து, அதை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்து, காரில் விற்பனைக்காாக பதுக்கி வைத்திருந்த, திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் போலீஸ்காரர் ஹிதயதுல்லா, 37, என்பவரை கைது செய்தனர்.
மதுவிற்பனையில் ஈடுபட்டு கைதான போலீஸ்காரர் ஹிதயதுல்லாவை, திருச்சி எஸ்.பி., செல்வநாகரத்தினம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். இவர் ஏற்கனவே மதுவிற்பனையில் ஈடுபட்டு 'சஸ்பெண்ட்' ஆனவர். இவரது மனைவியும் போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

