தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலையோர மண் குவியல் அகற்றிட நடவடிக்கை தேவை

சாலையோர மண் குவியல் அகற்றிட நடவடிக்கை தேவை

சாலையோர மண் குவியல் அகற்றிட நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 03, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் முக்கிய சாலைகளில் குவிந்துள்ள மண் குவியலை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தெற்கு நகர தே.மு.தி.க., செயலாளர் இளையராஜா, நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு:

விழப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் சென்டர் மீடியன் கீழே அதிகளவில் மண் குவியல் சேர்ந்துள்ளது. சாலையில் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்லும்போது, காற்றில் மண் துகள்கள் புழுதி போல் பறந்து, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 இதேபோல், விழுப்புரம் – புதுச்சேரி சாலை, புதிய பஸ் நிலையம் முதல் சென்னை செல்லும் மார்க்க சாலை உள்ளிட்ட நகரின் முக்கியமான சாலையோரம் மண் குவியல் அதிகரித்து வருகிறது.

எனவே சாலையோர மண் குவியலை அகற்றும் இயந்திரத்தை பயன்படுத்தி மண் குவியலை அகற்றிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us