ADDED : ஜூன் 11, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: இளம்பெண் இருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி காயத்ரி, 24; இவர், கடந்த 7ம் தேதி வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டிற்குள் அதே பகுதியை சேர்ந்த முகமது பாருக் மகன் சித்திக், 21; என்பவர், அத்துமீறி நுழைந்துள்ளார். சத்தம்கேட்டு காயத்ரி எழுந்து பார்த்தபோது சித்திக் தப்பியோடினார்.
விழுப்புரம் டவுன் போலீசார் சித்திக் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
