/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் மருந்தகம் திறப்பு விழா..
/
முதல்வர் மருந்தகம் திறப்பு விழா..
ADDED : பிப் 26, 2025 05:24 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருந்தகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி குத்துவிளக்கேற்றி வைத்தார்.
மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் காவிய வேந்தன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம் சிவ சக்திவேல், பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோட்டக்குப்பம்
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட கோட்டமேடு சறுக்கு பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ராஜன்பாபு, ரவி, அஜித்தாஸ், கூட்டுறவு சார் பதிவாளர்கள் செல்வி பாணு, தீபிகா, வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபிரகாஷ், மருத்துவ அலுவ லர் சரண்யா, சுகாதார ஆய்வாளர் ரவி, நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக் உட்பட பலர் பங்கேற்றனர்.

