வேலை உறுதி திட்டத்தில் 50 சதவீத பணி வேளாண்மைக்கு ஒதுக்க கோரிக்கை
வேலை உறுதி திட்டத்தில் 50 சதவீத பணி வேளாண்மைக்கு ஒதுக்க கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2026 07:11 PM
செஞ்சி: வேலை உறுதி திட்டத்தில் 50 சதவீத பணிகளை வேளாண்மைக்கு ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு 125 நாள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுதும் வேளாண்மை பணிக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தை வேளாண்மை துறைக்கு ஒதுக்கினால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு குறைந்து பயன் கிடைக்கும்.
சாகுபடி இல்லாத காலங்களில் தொழிலாளர்களை ஏரி, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்கவும், மரக்கன்று நடுதல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும்.
இதனால் நாட்டின் நீர் வளம், சுற்றுச்சூழல் மேம்படும், வேளாண்மையும் வளர்ச்சி பெறும். எனவே வேலை உறுதி திட்டத்தில் 50 சதவீதம் தொழிலாளர்களை வேளாண்மையில் ஈடுபடுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
