ADDED : ஜூலை 08, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: குட்கா பொருட்கள் விற்பனை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் இந்திரா நகரில் ரோந்து சென்றனர். அப்போது, அக்ரி நகரை சேர்ந்த இளஞ்செழியன் மனைவி ரமணி, 70, என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து ரமணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
