/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடுநிலை வாக்காளர் ஓட்டுகளை பெற 'மாஜி' அமைச்சரின் சகோதரர் வியூகம்
/
நடுநிலை வாக்காளர் ஓட்டுகளை பெற 'மாஜி' அமைச்சரின் சகோதரர் வியூகம்
நடுநிலை வாக்காளர் ஓட்டுகளை பெற 'மாஜி' அமைச்சரின் சகோதரர் வியூகம்
நடுநிலை வாக்காளர் ஓட்டுகளை பெற 'மாஜி' அமைச்சரின் சகோதரர் வியூகம்
ADDED : மார் 21, 2024 11:59 AM
விழுப்புரம்: அ.தி.மு.க.,வினர், முதலில் நம்ம ஆதரவாளர் ஓட்டுகளை கேன்வாஸ் செய்ய வேண்டும் என பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
விழுப்புரம் தொகுதியில் வார்டு வாரியாக அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் சண்முகம் சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை வழங்கி வருகிறார். அப்போது நிர்வாகிகளிடம், முதலில் நம்ம ஆதரவாளர் ஓட்டுகளை கேன்வாஸ் செய்யுங்கள்.
அடுத்து நடுநிலை வாக்காளர்கள் ஓட்டுகளை நம்ம கட்சிக்கு ஆதரவாக திரட்டுவது அவசியம். ஆளுங்கட்சி மீது அதிருப்தியாக உள்ள வாக்காளர்கள் ஓட்டுகளை முழுமையாக பெற வேண்டும்.
குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், நீண்ட காலமாக பணி நிரந்தரம் செய்யப்படாத நகராட்சி ஒப்பந்த பணியில் உள்ள துாய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர்கள், சம வேலை, சம ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களிடம், பேசி நமக்கு ஆதரவு நிலைப்பாட்டை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் நம் வெற்றி நிச்சயம் என அறிவுரை வழங்கி வருகிறார்.

