/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாய்தமிழ் பள்ளியில் இலக்கிய மன்றம்
/
தாய்தமிழ் பள்ளியில் இலக்கிய மன்றம்
ADDED : பிப் 26, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் ரோஷணையில் தாய்த்தமிழ் பள்ளியில் உலகத்தாய் மொழி நாள் நிகழ்ச்சிக்கான இலக்கிய மன்றம் நடந்தது.
திண்டிவனம் தமிழ்ச்சங்கத் தலைவர் துரை ராசமாணிக்கம் தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மரிய அந்தோணி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஏழுமலை, சம்பத், பெரமண்டூர் கண்ணதாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மனுநீதி சோழன் நாடகம், குழு பாட்டு நாட்டியம் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தமிழாசிரியை ராணி, உடற்கல்வி இயக்குனர் பாலசாக்ரடீஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

