ADDED : பிப் 28, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு ஆய்வகங்கள் திறப்பு விழா நடந்தது.
சென்னை, 8 குயின்ஸ் மென்பொருள் தொழில்நுட்ப கூட தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, ஆய்வகங்களை திறந்து வைத்தார்.
பின், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு பாட திட்டங்களின் முக்கியத்துவம் பற்றியும், இதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்தும் கூறினார்.
இ.எஸ்., கல்விக்குழுமம் நிர்வாக தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில், பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

