ADDED : ஆக 26, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் உள்ள மணி மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர்., சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவது 55வது நினைவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மாநில செயல் தலைவர் ரவி தலைமையில் நிர்வாகிகள், ஓ.பி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் ரெட்டி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், கவுரவ தலைவர் ரமணன், செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் தர்மசிவம் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

