/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரீன் பாரடைஸ் பள்ளியில் விளையாட்டு விழா
/
கிரீன் பாரடைஸ் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : பிப் 28, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: மயிலம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாணவர்களின் படை அணிவகுப்பு நடத்தினர். பள்ளி முதன்மை இயக்குனர் வனஜா சண்முகம் வரவேற்றார்.
பள்ளி செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் நடிகர் பாஸ்கர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
மாணவர்களின் யோகா, நாட்டுப்புற கலைகள், சிலம்பம், கூட்டு உடற்பயிற்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.

