ADDED : பிப் 26, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுாரில் பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுாரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி, 32; இவர், அதே பகுதியில் பிரியாணி கடை வைத்துள்ளார். இவர், கடந்த 23ம் தேதி இரவு 8:30 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது திண்டிவனம் அடுத்த சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன்,34; என்பவர், பாக்கியலட்சுமியை வழிமறித்து மதுபோதையில் தவறாக நடக்க முயன்று மிரட்டியுள்ளார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.

