கோட்டக்குப்பம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
கோட்டக்குப்பம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
ADDED : ஜூலை 04, 2026 02:54 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 4;30 மணிக்கு மாவட்ட ஆய்வு குழு அலுவலர் முருகையன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
முதல் தளத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர் அலுவலகத்தில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டடம் கட்டியதற்கான கோப்புகள், டெண்டர்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அங்கு நகராட்சி கமிஷனர் துர்கா இல்லை.
இதற்கிடையே மாலை 6;00 மணிக்கு, கமிஷரன் துர்கா அலுவலகத்திற்கு வந்தார். அவரது வாகனத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்தனர். பின், அவரிடம் ஒரு சில கோப்புகள் குறித்து விசாரணை நடத்தினர். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள் டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இரவு 9:00 மணிக்கு மேலாக சோதனை நீடித்தது.
