/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் விற்கும் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
/
ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் விற்கும் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் விற்கும் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் விற்கும் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
ADDED : டிச 09, 2025 03:58 AM
வி ழுப்புரம் மாவட்டத்தில், ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில், ரேஷன் கடைகள் மூலம் மாதம் தோறும் 20 கிலோ வரை இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும், நகர்ப்புறங்களில் உள்ள 50 சதவீதம் பேர் வரை, இந்த ரேஷன் அரிசியை வாங்குவதில்லை. இதனால், ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பது அதிகரித்துள்ளது.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ரேஷன் அரிசியை வாங்கி, அதனை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கும் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது.
இந்த புரோக்கர்கள் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ரேஷன் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் அரிசி வாங்குபவர்களை கண்டறிந்து அங்கு சென்று அவர்களிடமிருந்து பச்சரிசி 7 ரூபாய்க்கும், புழுங்கல் அரிசியை 10 ரூபாய்க்கும் வாங்கிச் செல்கின்றனர்.
அதனை மினி வேன்களில் கடத்திச் சென்று சில ரைஸ் மில்களில் ஸ்டாக் வைத்து, அதனை பாலீஷ் செய்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
மேலும், கோழி தீவனங்களுக்கும், சாலையோர உணவகங்களுக்கும், பேக்கரிகளுக்கும் இந்த ரேஷன் அரிசியை விற்கின்றனர்.
குறிப்பிட்ட சில புரோக்கர்கள் தான் இதில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது, குடிமைப் பொருள் வழங்கல் துறை போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.
அப்பாவி, வடமாநில தொழிலாளர்கள் சிலர் ரேஷன் அரிசியை வாங்கிச் செல்லும்போது பிடிக்கின்றனர்.
ஆனால், ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் விற்கும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், அரசின் பல கோடி ரூபாய் மானியம் வீணாகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

