ADDED : ஜூலை 08, 2026 02:37 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நடந்து சென்றவரைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராபின் சிங், 19; இவர் கடந்த மாதம் 28ம் தேதி பிற்பகல் குண்டலபுலியூர் ஏரிக்கரை அருகே நடந்து சென்றார்.
அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த தர்மாபுரியைச் சேர்ந்த விஷ்ணு, 30; தினேஷ், 32; குண்டலபுலியூர் வீராசாமி ஆகிய 3 பேரும் ராபின் சிங்கிடம் ஏன் இந்த பக்கம் வந்தாய் எனக்கேட்டு தகராறு செய்து தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விஷ்ணு உட்பட 3 பேர் மீது கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
