ADDED : ஜூலை 09, 2026 03:52 AM

செஞ்சி: திண்டிவனத்தில் இன்று விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
இது குறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரங்கபூபதி விடுத்துள்ள அறிக்கை:
வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்தும், தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் மாணிக்கதாகூர் அறிவுறுத்தல்படி லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்தை ஊழலற்ற மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களிடம் பரப்புரை செய்வது குறித்தும் விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் உள்ள காங்., கமிட்டி அலுவலகத்தில் எனது தலைமையில் இன்று 9ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர், கேட்டு கொண்டுள்ளார்.
