/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு ஆண்டு விழா விளையாட்டு போட்டி
/
கூட்டுறவு ஆண்டு விழா விளையாட்டு போட்டி
ADDED : நவ 13, 2025 09:07 PM

விழுப்புரம்: விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில், 72வது ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா விளையாட்டு போட்டி நடந்தது.
கூட்டுறவு சங்கம், மற்றும் வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், ஆண்களுக்கு மெதுவாக பைக் ஓட்டும் பந்தயமும், பெண்களுக்கு கோலப்போட்டியும் நடந்தது. ஆண்கள் 50 பேரும், பெண்கள் 100 பேரும் பங்கேற்றனர்.
போட்டிகளை கூட்டுறவு விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, துணை பதிவாளர் சிவபழனி ஆகியோர் மேற்பார்வையில், சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 17 ம் தேதி நடைபெற உள்ள கூட்டுறவு வார விழாவில், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதில், துணை பதிவாளர் வெங்கட்பிரபு, சார் பதிவாளர் சிவபானு, ஒருங்கிணைப்பாளர் மணிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

