/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு
கூட்டுறவு சங்க பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு
கூட்டுறவு சங்க பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு
ADDED : டிச 02, 2025 05:39 AM
விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் குறித்த விசாரணை பணிகளை கூட்டுறவு சங்க பணியாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த எஸ்.ஐ.ஆர்., மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் குறித்த விசாரணை போன்ற பணிகளில் கூட்டுறவு சங்க பணியாளர்களை ஈடுபடுத்த தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து பணிகளை புறங்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்தனர்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட சங்கத் தலைவர் ஏழுமலை கூறுகையில், 'வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகள் என்பது உள்ளாட்சித் துறை மற்றும் கல்வித்துறை பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டியது. அதில் கூட்டுறவு சங்க பணியாளர்களை ஈடுபடுத்துவதால் பணிச் சுமை ஏற்படுகிறது. வழக்கமான பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பதாரர் சொந்த நிலம் வைத்திருக்கிறார்கள் என்பதை உள்ளிட்ட புள்ளி விபரங்களை கூட்டுறவு சங்க பணியாளர்களால் எப்படி அறிந்திருக்க முடியும். எனவே, இப்பணிகளை புறக்கணிக்கின்றோம்' என்றார்.

