/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு வார விழா மினி மாரத்தான் போட்டி
/
கூட்டுறவு வார விழா மினி மாரத்தான் போட்டி
ADDED : நவ 14, 2025 11:25 PM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் 72வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டத்தில் பணிபுரியும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் பங்கேற்ற 35 கி.மீ., துாரம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், 850 பேர் பங்கேற்றனர். இதில், முதல் 5 பேருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. முதல் 100 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

