/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்சி கரை வேட்டியுடன் வராத நிர்வாகிகள் :மாவட்ட செயலாளர் அபராதம் விதிப்பு

ADDED : டிச 09, 2025 03:57 AM
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாசார் பகுதியில் தே.மு.தி.க., மாநாடு வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, விழுப்புரத்தில் சமீபத்தில் தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர், கட்சி வேட்டி, வெள்ளை சட்டை அணியாமல் பேண்ட் மற்றும் கலர் சட்டை அணிந்து வந்தனர்.
இதனைப் பார்த்து டென்ஷன் ஆன மாவட்ட செயலாளர், 'கட்சி கூட்டத்திற்கு வரும் போது கட்சி கரை வேட்டி, வெள்ளை சட்டையில்தான் வேண்டும். இதனை மீறிய நிர்வாகிகளுக்கு, அவரவர் பதவிக்கு ஏற்ப 100 முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.
அடுத்த கூட்டத்திலும் இது தொடர்ந்தால் அபராத தொகை கூடுதலாகும் என கண்டிப்போடு தெரிவித்தது மட்டுமல்லாமல் நிர்வாகிகளிடம் அபராத தொகையையும் கறாராக வசூலித்தார்.
அவ்வாறு வசூலான 6,700 ரூபாயை கட்சி தலைமை அலுவலக வங்கி கணக்கிற்கு அனுப்பி வரவு வைத்துள்ளார். மேலும், அந்த பணத்தை வரவு வைத்ததற்கான ஸ்கீரின் ஷாட்டை கட்சி நிர்வாகிகள் குரூப்பில் உள்ள வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் அனுப்பியுள்ளார்.