/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 07, 2025 05:31 AM

விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க., நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
மாநில துணை பொது செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வரவேற்றார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜனகராஜ், கண்ணப்பன், மாரிமுத்து, பிரேமா, தயா இளந்திரையன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், தொகுதி பார்வையாளர் துரை சரவணன் முன்னிலை வகித்தனர். தமிழக துணை முதல்வர் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில், நகர மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி பிரபு, ஜெயமூர்த்தி, பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, ஒன்றிய சேர்மன்கள் சச்சிதானந்தம், வாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சம்பத், பஞ்சநாதன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், முருகவேல், செல்வமணி, கணேசன், சீனுசெல்வரங்கம், ராஜா, பாஸ்கர், ராஜி புஷ்பராஜ், சந்திரசேகர், மைதிலி ராஜேந்திரன், முரளி, நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல், பேரூர் செயலாளர் ஜீவா, ஜெயமூர்த்தி.
மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் முத்துசாமி, அமைப்பாளர் சிவா, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர்கள் மணவாளன், சாந்தராஜ், ஜனனி தங்கம், நவநீதம் மணிகண்டன், சிவக்குமார், அரசு வழக்கறிஞர் வீரமணி, வார்டு பிரதிநிதி மும்தாஜ்பேகம், நகர தொண்டர்படை அமைப்பாளர் சாதிக், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தராஜ், வார்டு செயலாளர்கள் தங்கம் சுந்தர் உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

