/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் நேர களப்பணியாளர்களை உற்சாகப்படுத்தி தி.மு.க., வியூகம்
/
தேர்தல் நேர களப்பணியாளர்களை உற்சாகப்படுத்தி தி.மு.க., வியூகம்
தேர்தல் நேர களப்பணியாளர்களை உற்சாகப்படுத்தி தி.மு.க., வியூகம்
தேர்தல் நேர களப்பணியாளர்களை உற்சாகப்படுத்தி தி.மு.க., வியூகம்
ADDED : டிச 09, 2025 03:59 AM
வி ழுப்புரம் மாவட்டத்தில் துணை முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, களப்பணியாளர்களை உற்சாகப்படுத்தி, வழக்கமான தேர்தல் வியூகத்தை தி.மு.க., தொடங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்த துணை முதல்வர் உதயநிதி பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் தொடர்ந்து வரும் தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வின் நல்லாட்சிக்கும், வளர்ச்சி திட்டங்களுக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களாகிய நீங்கள் வழங்கிய ஆதரவு தான் காரணம். நீங்கள் தான் ஆட்சியில் அமர்த்தினீர்கள், அந்த நல்லாட்சி மீண்டும் தொடர பாடுபட வேண்டும். இன்னும், 3, 4 மாதங்கள் மட்டுமே உள்ளதால், களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என உருக்கமாக பேசி, உற்சாகப்படுத்தினார்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்ற 600க்கும் மேற்பட்டோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கட்சியினருக்கு பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது.
துணை முதல்வர் வருகையையொட்டி, வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட நிர்வாகிகள், போட்டி போட்டுக்கொண்டு, தாராளமாக செலவிட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
துணை முதல்வரும், ஒரே நேரத்தில் கட்சியினரை சந்தித்து, தங்களது தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டு, உற்சாகப்படுத்தி சென்றுள்ளார். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற உள்ள பி.எல்.ஏ., நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், களப்பணியாளர்களை துாண்டிவிட்டு சென்றுள்ளதால், தி.மு.க., வின் தேர்தல் பணி வேகமெடுத்துள்ளது.

