/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வர வேண்டியது வந்து சேரும் கவலைப்படாதீங்க சேர்மன் உறுதி; நிர்வாகிகள் குஷி
/
வர வேண்டியது வந்து சேரும் கவலைப்படாதீங்க சேர்மன் உறுதி; நிர்வாகிகள் குஷி
வர வேண்டியது வந்து சேரும் கவலைப்படாதீங்க சேர்மன் உறுதி; நிர்வாகிகள் குஷி
வர வேண்டியது வந்து சேரும் கவலைப்படாதீங்க சேர்மன் உறுதி; நிர்வாகிகள் குஷி
ADDED : டிச 02, 2025 05:35 AM
வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தேர்தல் முன்னேற்பாடுகளை ஆளுங்கட்சியினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மேற்பார்வையில், விழுப்புரம், வானுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.
இதையடுத்து விழுப்புரம் தொகுதியில் உள்ள 291 ஓட்டுச்சாவடிகள் மற்றும் வானுார் தொகுதியில் உள்ள 278 ஓட்டுச்சாவடிகளுக்கும், பூத் கமிட்டி அமைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் மாவட்ட துணை சேர்மன் மைதிலி ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடுவீடாக நேரில் சென்று தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி, ஆதரவு திரட்டி வருகின்றனர்.
கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணிகளை ஆய்வு செய்து, ஒட்டை கிராமத்தில் கட்சி நிர்வாகிகளிடையே ஒன்றிய சேர்மன் பேசுகையில், 'வானுார் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியின் வெற்றி என்பது உறுதி. அந்த அளவுக்கு பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலினின் பணிகள் சென்றடைந்துள்ளது.
நீண்ட காலத்திற்கு பின், வானுார் தொகுதியை தி.மு.க., கைப்பற்றும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தேர்தலின் போது உங்களுக்கு வரவேண்டியது கட்டாயம் வந்து சேரும், எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்' என்றார். இதனால், கட்சி நிர்வாகிகள் குஷியடைந்துள்ளனர்.

